உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ராமாயணத்தில் ஹான்ஸ் ஜிம்மர் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி... பின்னணி இசைக்குப் பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா?

ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் இசை, ஒரு காட்சியின் உணர்வை வெளிப்படுத்தவும், கதாபாத்திரங்களின் மனநிலையை உணர்த்தவும், பதற்றத்தை உருவாக்கவும் உதவுகிறது. சில நேரங்களில் சாதாரணமான ஒரு தருணத்தைக்கூட நினைவில் நிற்கச் செய்கிறது. ஆனால், ஒரு திரைப்படத்துக்கு எப்படிப்பட்ட இசை பொருத்தமாக இருக்கும் என்பதை இசையமைப்பாளர் எவ்வாறு முடிவு செய்கிறார்? ஒரு திரைப்படத்துக்கான பின்னணி இசையை உருவாக்குவதற்கும், படத்துக்கான பாடல்களை இசையமைப்பதற்கும் என்ன வித்தியாசம்? ஜெர்மனியில் பிறந்து ஹாலிவுட்டில் பணியாற்றும் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இணைந்து நிதேஷ் திவாரி இயக்கும…