Nakkheeran
ரூ.4,730 கோடி மதிப்பிலான மணல் குவாரி முறைகேடு?; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!
ரூ.4,730 கோடி மதிப்பிலான மணல் குவாரி முறைக்கேடு வழக்கில், மணல் குவாரி தொழிலதிபர்கள் வீடுகளில் இன்று (06-11-26) காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக நீர்வளத்துறைக்கு கீழ் இயங்கிய 28 மணல் குவாரிகள் பல ஆண்டுகளாக அனுமதிக்கப்பட்ட அளவை விட 10 முதல் 30 மடங்கு வரை கூடுதலாக ஆற்று மணல் அள்ளியதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2023ஆம் ஆண்டு அமலாக்கத்துறை, பல்வேறு மணல் குவாரி நிறுவனங்கள், மணல் குவாரி தொழிலதிபர்கள் வீடுகள் என அனைத்திலும் சோதனை நடத்தி விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் முடிவில் சட்டவிரோதமாக கூடுதலாக மணல் அள்ளியதில் சுமார் ரூ.4,730 கோடி வரை முறைக…