உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஜார் பளிச்சென்று இருக்கு... ஆனா மூடியின் நிலைமை? சுத்தம் செய்ய இந்த 2 பொருட்கள் போதும்

கிச்சனில் அன்றாடம் பயன்படுத்தப்படும் முக்கியமான மின்சாதனங்களில் மிக்ஸியும் ஒன்று. சட்னி அரைப்பது, மசாலா தயாரிப்பது, தேங்காய் விழுது அரைப்பது எனப் பல்வேறு சமையல் வேலைகளுக்கு மிக்ஸி பெரிதும் உதவுகிறது. இதனால் பெரும்பாலான வீடுகளில் தினமும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை மிக்ஸி பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் மிக்ஸி ஜாரைத் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்யும் பலரும், அதன் மூடியைச் சுத்தம் செய்வதில் போதிய கவனம் செலுத்துவதில்லை. ஆனால், மிக்ஸி ஜாரைப் போலவே அதன் மூடியையும் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். குறிப்பாக, மிக்ஸி மூடியின் ஓரங்கள், பள்ளங்கள் மற்றும் ரப்பர…