Indian Express Tamil
சென்னையில் ரஷ்ய விண்வெளி வீரர் சிலையைத் திறந்து வைத்த இஸ்ரோ தலைவர் நாராயணன்: யார் இந்த யூரி ககாரின்?
விண்வெளிக்குச் சென்ற உலகின் முதல் மனிதரான ரஷ்யாவின் யூரி ககாரினின் சிலை சென்னை பெரியார் அறிவியல் மையத்தில் திறக்கப்பட்டது. இச்சிலையை இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் திறந்து வைத்துப் பேசுகையில், ஆர்யபட்டா செயற்கைக்கோள் ஏவுதல் முதல் கிரையோஜெனிக் தொழில்நுட்பம் வரை இந்தியாவின் விண்வெளித் துறை வளர்ச்சிக்கு ரஷ்யா அளித்த ஆதரவை நன்றியுடன் நினைவுகூர்ந்தார். விண்வெளிக்குச் சென்ற உலகின் முதல் மனிதரான யூரி ககாரினின் சிலையை இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் சென்னையில் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் தொடக்கக்கால விண்வெளி முயற்சிகள் முதல் தற்போதைய வளர்ச்சி வரை ரஷ்யா அளித்த தொடர்ச்சியான ஆதரவுக்க…