உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’ஒரே நேரத்தில் கரை ஒதுங்கிய 50 திமிங்கிலங்கள்’; கூர்மையான பாறைகளால் நேர்ந்த சோகம்

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், ஒரே நேரத்தில் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கிலங்கள். பெரும் கவலையில், கடல்சார் அதிகாரிகள் மற்றும் இயற்கை ஆர்வார்கள். நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள ’ங்காவி’ கடற்கரையில் கடந்த புதன்கிழமை (04-11-26) இரவு, 50-க்கும் மேற்பட்ட ’பைலட்’ திமிங்கிலங்கள் ஒரே நேரத்தில் கரை ஒதுங்கின. மறுநாள் காலையில், அந்த கடற்கரை பகுதிக்கு வந்த மக்கள் அங்கு திமிங்கிலங்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அவர்கள் இது குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த அதிகாரிகளும், தன்னார்வ மருத்துவக் குழுவினரும், உள்ளூர் மாஓரி பழங்குடியின…