Indian Express Tamil
த.வெ.க எம்.எல்.ஏ-விடம் ரூ. 30 கோடி பேரம்: மதுரை அ.தி.மு.க நிர்வாகி அதிரடி கைது
நேற்று முன்தினம் புதன்கிழமை மதுரை விமான நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மதுரை மத்தி தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ முஸ்தபா, த.வெ.க அரசுக்கு எதிரான நம்பிக்கையின்மை தீர்மானத்தில், எதிர்த்து வாக்களித்தால், 30 கோடி ரூபாய் வரை தருவதாக தன்னிடம் பேரம் பேசபட்டதாக பரபர குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்களை வாங்க குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றன. குதிரை பேரத்தில் ஈடுபட எனக்கே செல்போன் அழைப்பு வந்துள்ளது. என்னையே தொடர்புகொண்டு நீங்கள் முதலில் 15 கோடி ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள், நாங்கள் (தி.மு.க, அ.தி.மு.க) சட்டமன்றத்தில் த.வெ.க அர…