Vikatan
ட்ரம்ப் கட்சி தோல்வி: "மதச்சார்பின்மையும், அடிப்படை ஜனநாயக உணர்வும் வென்றுள்ளன" - ப.சிதம்பரம் பதிவு
அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில், குடியரசுக் கட்சி (ட்ரம்ப் கட்சி) பின்னடைவைச் சந்தித்துள்ளது. இப்போது ஜனநாயகக் கட்சி (எதிர்க்கட்சி) பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இதைக் குறிப்பிட்டு காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “சட்டவிரோதக் குடியேற்றம், ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்கர்களின் ஊடுருவல், இஸ்லாமோபோபியா (இஸ்லாமியப் பயம்) சார்ந்த வெறுப்புப் பிரசாரங்கள் போன்ற பலவிதமான கூச்சல் குழப்பங்களுக்கு…