உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ரூ.4,730 கோடி மணல் குவாரி முறைகேடு வழக்கு: தமிழகம் முழுவதும் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

தமிழகத்தில் அரசு ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற மாபெரும் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய முதல் தகவல் அறிக்கையின் (எஃப்.ஐ.ஆர்) அடிப்படையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (டி.வி.ஏ.சி) அதிகாரிகள் இன்று காலை முதலே அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள 28 மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 30 மடங்கு வரை கூடுதலாக, அதாவது சுமார் 23 லட்சம் யூனிட் ஆற்று மணல் சட்டவிரோதமாகக் கொள்ளையடிக்கப்பட்டதை அமலாக்கத்துறை (இ.டி) முன்னதாகக் கண்டறிந்திருந்தது. இதன் மூலம் சுமார் ரூ.4,730 கோடி அளவி…