Samayam Tamil
தினமும் அதிகரிக்கும தங்கம் விலை: பழைய சேலையில் இருந்து எவ்வளவு தங்கம், வெள்ளி கிடைக்கும் தெரியுமா?
தங்கம் மற்றும் வெள்ளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பலரது பார்வையும் வீட்டின் பீரோக்களில் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பழைய பட்டுப் புடவைகள் பக்கம் திரும்பியுள்ளது. திருமணம் மற்றும் விசேஷங்களுக்காகப் பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட காஞ்சிபுரம் போன்ற பாரம்பரிய பட்டுப் புடவைகளின் ஜரிகையில் தங்கம் மற்றும் வெள்ளி கலந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், உண்மையில் ஒரு பட்டுப் புடவையில் எவ்வளவு தங்கம், வெள்ளி இருக்கும்? அதை எப்படிக் கண்டறிவது? பழைய புடவையை விற்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை என்னென்ன? என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.