Indian Express Tamil
ரூ.1000 கோடி மிஸ்ஸிங், தியேட்டர் வசூல் ஓவர்; ஓ.டி.டியில் ரிலீஸ் ஆகும் ஜெயிலர் 2: எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?
தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறிய ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம், தியேட்டர் வசூல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்த படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கததில் கடந்த அக்டோபர் 14-ந் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. 2023-ம் ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக வெளியான இந்த படம், முதல் நாளில் இருந்தே வசூலில் பெரிய சாதனை நிகழ்த்தி வரும் நிலையில், சமீபத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற புதிய சாதனையை படைத்திருந்தது. இதனிடையே, 'ஜெயிலர் 2' திரைப்படம், கடந்த சில நாட்களாக வசூலில் சற…