உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

முதல் இந்திய நடிகர் - சர்வதேச விருது விழாவில் விஜய் சேதுபதிக்கு கிடைத்த கௌரவம்!

சின்னத்திரையில் ஆங்கிலம் அல்லாத தொடர்கள், நிகழ்ச்சிகள் மற்றும் கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக 1973ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ‘எம்மி’ சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான 54வது எம்மி விருதுகள் நவம்பர் 23ஆம் தேதி நியூ யார்க் நகரில் நடக்கவுள்ளது. இவ்விருதில் விருது வழங்குபவர்களில் ஒருவராக தமிழ் நடிகர் விஜய் சேதுபதியும் கலந்து கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது உறுதியாகும் பட்சத்தில் எம்மி விருது விழாவில் விருது வழங்கும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை விஜய் சேதுபதி பெறுவார். ஏற்கனவே அவர் நடித்த மகாராஜா படம் ஆங்கிலத்தில் ரீமேக் ஆகவுள்ளதால் அவருக்கு ஹாலிவுட…