Nakkheeran
செய்தியாளரின் செல்போன் பறிப்பு; பல்லாவரம் எம்.எல்.ஏ காமாட்சியின் உதவியாளர் அடாவடி!
செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட செய்தியாளரின் செல்போனைப் பறித்து செய்தியாளர் பணியைத் தடுத்த சம்பவத்திற்கு தமிழ்நாடு பாரதிதாசன் பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையைடுத்த திரிசூலம் பகுதியில், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. அப்போது கட்சி நிர்வாகிகளுக்கிடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டு வாக்குவாதம் நடைபெற்றது. இந்நிலையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் அப்துல்காதர் இதனை தனது செல்போனில் பதிவு செய்தார். அப்போது பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சியின் உதவியாளர் கோகுல் பத்திரிகையாளர்…