Nakkheeran
’மாமனார் வீட்டாரின் மீது கோபம்’; திட்டம்போட்டு குடும்பத்தையே காலிசெய்த மருமகன்
ஓட்டுநர் ஒருவர் திட்டம்போட்டு தனது மாமனார் குடும்பத்தையே தொடர்கொலை செய்துள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள பாஷ்யம் சர்க்கிள் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சேகர். இவருக்குத் திருமணமாகி 20 வருடங்கள் ஆகின்றன. இவரது மனைவி சுனிதாவிற்கும், இவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. அதனால், சுனிதா அடிக்கடி அவரது அம்மா வீட்டிற்குச் சென்றுவிடுவார். இது, அவரது கணவருக்குப் பிடிக்கவில்லை. எனவே, மனைவிக்கு ஆதரவு தரும் அவர்களது குடும்பத்தையே கொல்லத் திட்டமிட்டார். அதன்படி, தனது மனைவியைக் கல்லால் அடித்துகொலை செய்தார். பின்பு, அந்த உடலைத் துணிய…