Maalaimalar
ஆஜராவதற்கு ஒருநாள் முன்னதாகவே மன்னன் கைது செய்யப்பட்டது ஏன்? சட்டங்களும், நீதிமன்ற தீர்ப்புகளும் தவெக அரசை கட்டுப்படுத்தாதா? - இன்பதுரை கேள்வி
மதுரை முன்னாள் துணை மேயர் மற்றும் அதிமுக நிர்வாகியான பி.எம். மன்னனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார், நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், இன்றே கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஒருநாள் முன்னதாகவே அவர் கைது செய்யப்பட்டதற்கு என்ன காரணம், யார் அழுத்தத்தின் பேரில் இது அரங்கேற்றப்பட்டது? என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்…