உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நடைப்பாதை அமைத்த விவகாரம்.. வனத்துறையிடம் செளமியா அன்புமணி மனு..!

தமிழகத்தில் பள்ளிகரணை உட்பட 26 ஆயிரத்து 800 சதுப்பு நிலப்பகுதிகளை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் 8 ஆண்டுகளாக அறிக்கை செய்யாதது ஏன் என பாமக சட்டமன்ற குழு தலைவர் செளமியா அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் கட்டப்பட்டு வரும் தடுப்புச் சுவர் மற்றும் நடைபாதையை அகற்றி அத்திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தி சென்னை கிண்டியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் மனு அளித்த சவுமியா அன்புமணி, சதுப்பு நிலங்களை அறிவிக்கை செய்யாததன் பின்னணியில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் அரங்கேறி வருவதாக குற்றம்சாட்டினார்.