உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

திருச்சி பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து... வெடித்துச் சிதறிய பட்டாசுகள்; அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்ப்பு

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் தீபாவளியை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பட்டாசு கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடையில் இருந்த பட்டாசுகள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்து அலறியடித்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். இருப்பினும், தீயணைப்புத் துறையினரின் துரிதமான நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருகே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் விற்பனைக்காக தற்காலிக ப…