Indian Express Tamil
கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தக டெண்டர் முறைகேடு புகார்; தனிக்குழு அமைத்து விசாரணை - அமைச்சர் சம்பத் குமார் அதிரடி
கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்கான டெண்டரில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள புகார் குறித்து தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்றும், தவறு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்குக் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் சம்பத் குமார், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்குக் கடனுதவிகளை வழங்கினார். இதேப…