IBC Tamil
காவல் நிலையத்தில் இளம் குடும்பஸ்தர் மரணம் : பாரபட்சமற்ற விசாரணைக்கு வலியுறுத்து
ஹோமகம காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்த சந்தேக நபரான இளம் குடும்பஸ்தர் இஷாரா ஹர்ஷ குமாரவின் மரணம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்கம், இவ்விஷயம் குறித்து உடனடியாக பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்துமாறு காவல்துறை மா அதிபரையும் மற்ற அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டுள்ளது. உயிரைப் பறிக்க எந்தவொரு அதிகாரத்திற்கும் உரிமை இல்லை காவலில் உள்ள...