Samayam Tamil
ரிஷப ராசி ராகு கேது பெயர்ச்சி 2026: அவசர முடிவுகளைத் தவிர்த்தால் முன்னேற்றம் காணும் வாய்ப்புகள்
ராகு கேது பெயர்ச்சி 2026 எப்போது? வாக்கிய பஞ்சாங்கக் கணக்குப்படி 13-11-2026 அன்று இரவு 8.30 மணிக்கு ராகு–கேது பெயர்ச்சி நடக்கவுள்ளது. இந்த பெயர்ச்சியின் போது ராகு பகவான் ரிஷப ராசிக்கு 9-ஆம் இடமான பாக்கியம், தந்தை, குரு, தர்மம், உயர்கல்வி ஆகிய ஸ்தானங்களை குறிக்கக்கூடிய இடத்திலும், கேது பகவான் 3-ஆம் இடமான தைரியம், தன்னம்பிக்கை, முயற்சி, இளைய சகோதரர்கள் ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்யத் தொடங்குகிறார். இந்த பெயர்ச்சியால் ரிஷப ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் அடுத்த ஒன்றரை ஆண்டுகள் கிடைக்கும் என சிதம்பரம் ஸ்ரீ கணபதி ஜோதிட நிலையம் M. சிவராஜன் அவர்கள் விரிவாக விளக்கியுள்ளார்.