Dinamani
பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்!
பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள ராஜ்புரா அருகே, அமிர்தசரஸ் நோக்கிச் சென்ற கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரயிலின் நான்கு பெட்டிகளில் வெள்ளிக்கிழமை தீப்பிடித்தது. இதனால் பயணிகள் மத்தியில் கடும் பதற்றம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால், எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாகவே இந்தத்…