Maalaimalar
கொடைக்கானலில் குவியும் அரியவகை பறவை இனங்கள்
அரியவகை பறவைகள் கொடைக்கானல் ஏரி சாலை அருகே உள்ள மரங்களில் தென்படுவதால் சுற்றுலா பயணிகள் வியந்து பார்த்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். கொடைக்கானலில் தற்போது நிலவி வரும் இதமான சூழல் மற்றும் மிதமான சாரல் மழை காரணமாக கொடைக்கானல் நட்சத்திர ஏரி பகுதியில் அரியவகை பறவை இனங்கள் அதிக அளவில் குவியத் தொடங்கியுள்ளன. தற்போது ஏரி பகுதியில் உள்ள மரங்களில் பெலிகனிபார்மசு வகையை சேர்ந்த பறவையினம் அதிக அளவில் காணப்படுகிறது…