Indian Express Tamil
விண்வெளி நிலையத்துக்கே பவர் கொடுத்த அனில் மேனன்: 7 மணி நேர ஆபத்தான பயணம் வெற்றி
பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியிருக்கும் இந்திய வம்சாவளி நாசா விண்வெளி வீரரான அனில் மேனன், விண்வெளியில் சுமார் 7 மணி நேரம் நடந்து முக்கியமான பராமரிப்புப் பணியை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளார். கனடா நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர் ஜோசுவா குட்ரிக் என்பவருடன் இணைந்து அனில் மேனன் இந்த விண்வெளி நடையை (Spacewalk) மேற்கொண்டார். இந்திய நேரப்படி நவம்பர் 6-ஆம் தேதி அதிகாலை 2:05 மணிக்கு முடிவடைந்த இந்த ஆபத்தான பயணம், சரியாக 6 மணி நேரமும் 59 நிமிடங்களும் நீடித்தது. இந்த விண்வெளி நடையின் முக்கிய நோக்கமே விண்வெளி நிலையத்திற்குத் தேவையான கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்வதுதான். விண்வெளியில்…