உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

ஜெம் வீரமணி விவகாரம் : தமிழக அரசு முக்கிய உத்தரவு!

பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குழந்தை நல ஆர்வலர் ஒருவர் புகார் கொடுத்ததன் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இவ்வழக்கில் வீரமணி, அவரது உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், வீரமணி நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் உதவியாளர் கணேசன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே ஜெம் வீரமணி மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மேலும் ஒரு சிறுமியின் புகார் மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில் 8 ஆவதாக மேலும் ஒரு வழக்கு 21.10.2026ஆம் தேதி பதிவு செய்யப்பட்டு விசா…