Nakkheeran
“சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடியது எப்படி? - சிறைத்துறை விளக்கம்!
தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் இரவு நேரத்தில் தப்பி ஓடிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 5 பேர் பிடிபட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தேனி மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கி உள்ளது. கைதிகள் தப்பியோடியது எப்படி என சிறைத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், “தேனி மாவட்டச் சிறைச்சாலையானது 10.012019 முதல் தேக்கம்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இச்சிறைச்சாலையின் அங்கீகரிக்கப்பட்ட கைதிகள் தங்கும் கொள்ளளவு 200 ஆகும். 26.10.2026 அன்று, இச்சிறைச்சாலையில் மொத்தம் 334 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இரவு சுமார்…