Indian Express Tamil
வைதீக முறைப்படி திருமணம்; வருத்தம் தெரிவித்த துரைமுருகன்: 'பேத்தி வற்புறுத்தலால் இது நடந்தது; அரசியல் ஆக்க வேண்டாம்' என வேண்டுகோள்
பேத்தியின் வற்புறுத்தலின் பேரில்தான், வைதீக முறை திருமணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது என்று தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகனின் பேத்தியும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் - சங்கீதா இணையரின் மகள் செந்தாமரைக்கும், திட்டக்குடி ரவி கண்ணன் - தீபா ரவி தம்பதியின் மகன் தீபக் ரவிக்கும் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் வைதீக முறைப்படி நடைபெற்றதால் பெரும் விமர்சனங்கள் எழுந்தது. மேலும் இதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் கண்டனம் தெரிவ…