Indian Express Tamil
கோவை- பீகார் இடையே சிறப்பு ரயில் : தீபாவளி நெரிசலை தவிர்க்க நடவடிக்கை
தீபாவளி மற்றும் சத் பூஜை பண்டிகைகளைக் முன்னிட்டு, பயணிகளின் கடும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு கோவை போத்தனூர் மற்றும் பீகார் மாநிலம் பரௌனி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நீண்ட தூரம் பயணம் செய்யும் வட மாநில தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில் இயக்க விவரங்கள்: போத்தனூர் - பரௌனி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06079): இந்த சிறப்பு ரயில் வருகிற நவம்பர் 07, 2026 அன்று இரவு 21.55 மணிக்கு போத்தனூர் சந்திப்பில் இருந்து புறப்பட்டு பரௌனி சென்றடைகிறது. பரௌனி - போத்தனூர் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06080): மறும…