Polimer News
கொடைக்கானலில் கடந்த 3 நாட்களில் 26 செ.மீ அளவுக்கு மழைப்பதிவு..!
கொடைக்கானலில் கடந்த 3 நாட்களில், 26 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்தும், நீர் தேக்கங்கள் பகுதியளவு மட்டுமே நிரம்பியுள்ளன. கொடைக்கானல் மக்களுக்கும், சுற்றுலாப்பயணிகளுக்கும் குடிநீர் ஆதாரமாக அப்சர்வேட்டரி அருகே மண் அணை, மற்றும் மனோரத்தினம் நீர் தேக்கம் அமைந்துள்ளது. 22 அடி கொள்ளளவு மண் அணை நீர் தேக்கத்தில் 10 அடி அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது. 36 அடி கொள்ளவு கொண்ட மனோரத்தினம் நீர் தேக்கத்தில் 19 அடி வரை மட்டுமே தண்ணீர் நிறைந்துள்ளது.