உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

அதிமுக நிர்வாகி மன்னனை விடுவிக்க உத்தரவு; நீதிபதி சரமாரி கேள்வி!

தவெக ஆட்சியைக் கவிழ்க்க திமுகவும், அதிமுகவும் பேரம் பேசுவதாக தவெகவினர் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில், ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் போலீசார் 10க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் இந்த வழக்குத் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த சூழலில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மதுரை மத்திய தொகுதியின் தவ…