Nakkheeran
தொடக்கப் பள்ளியில் சமூக நல்லிணக்கத் தீபாவளி கொண்டாட்டம்!
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சி. கொத்தங்குடி தொடக்கப்பள்ளியில் சமூக நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 25 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வெறும் 6 மாணவர்களுடன் செயல்பட்டு வந்த இப்பள்ளியில், தலைமை ஆசிரியர் ஈஸ்வரியின் தொடர் முயற்சியால் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மாணவர்களிடையே சமூக நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வளர்க்கும் நோக்கில் தீபாவளியைக் கொண்டாடும் வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் ஞானகுமார், துணைப்…