Nakkheeran
டாஸ்மாக் போர்! தனியார் பார்! தள்ளாடும் விஜய் நிர்வாகம்!
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரை, மேற் பார்வையாளர், விற்பனை யாளர், துணை விற்பனையாளர் என சுமார் 36,000 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுவந்தாலும் இதுவரை எந்த ஆட்சியிலும் அதை செய்யவில்லை. இச்சூழலில், விற்பனை செய்யப்படும் மது பாட்டில்கள்மீது, நவம்பர் 1ஆம் தேதி முதல் சுற்றுச்சூழல் மற்றும் சமூகநல வரியாக ரூ.10 விதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதேபோல் பயன்படுத்திய பின் காலி மதுபாட்டில்களை திரும்பக் கொடுக்கும் போது நுகர்வோர், அந்த 10 ரூபாயை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப் பட்டது. ஆனால் காலி பாட்டில்களை தி…