Nakkheeran
NO கூட்டம், வரவேற்பு! -விஜய் விரக்தி!
தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள 5 தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே ஒரு சுற்று பிரச்சாரத்தை முடித்துவிட முதலமைச்சர் முடிவெடுத்த நிலையில், முதல்கட்டமாக விராலிமலை தொகுதியை முன்னிறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழ்ச்சி நடத்த திடீரென 5 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரூ.23 கோடியில் தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட புதுக்கோட்டை பேருந்து நிலையத்தையும், உள் விளையாட்டு அரங்கத்தையும் நவம்பர் 2ஆம் தேதி, திங்கள் கிழமை திறந்து வைக்கவும், புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக பொதுப்பணித்துறை ரூ.1 கோடி செலவு ச…