உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

விஜய்க்கு எதிராக எடப்பாடி தடாலடி!

"நவம்பரில் விஜய்க்கு செக்! அரசியல் கள அதிரடி' எனும் தலைப்பில் இரண்டு இதழ்களுக்கு முன்பு நக்கீரனில் நாம் எழுதிய அட்டைப்பட செய்திக்கு பிறகு, தமிழக அரசியலில் அந்த செய்தியைப் பற்றித்தான் பேச்சு! அந்த அட்டைப்பட செய்தியில், தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் நம்பிக்கையையும் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு இழந்திருப்பதையும், தமிழகத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டி விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்பதையும், தீர்மானத்தை வெற்றிபெற வைக்க த.வெ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப்பெறும் முயற்சியில் களமிறங்கியுள்…