IBC Tamil
இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலியை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட சிரமதானப் பணிகள்
எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் அதன் ஒரு பகுதியாக இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள் சிரமதானப் பணிகளை முன்னெடுத்துள்ளனர். தமிழ் மக்களது சுபீட்சமான வாழ்வுக்காக தங்களது இன்னுயிர்களை ஈக்கம் செய்த மாவீரர்களை போற்றி வணங்குகின்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்முறையும் நவம்பர் 27ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட இருக்கின்றது. அந்த வகையிலே மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்காக தமிழர் தாயக பகுதிகளி...