Daily Thanthi
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 8 மீனவர்கள் சென்னை திரும்பினர்
மீனம்பாக்கம், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 3-ந்தேதி கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 9 மீனவர்களையும் கைது செய்தனர். விடுதலை பின்னர், 9 பேரையும் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில், படகு ஓட்டுநர் 2-வது முறையாக கைது செய்யப்பட்டதால் அவருக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 8…