உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

உள்ளாட்சித் தேர்தல் ஆயத்த பணிகள் வேகம்: வார்டு மறுவரையறை குறித்து மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை

தமிழ்நாட்டில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பல்வேறு புதிய உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகளைச் சீரமைப்பது மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பது குறித்த உயர்நிலைக் கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநிலத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் அண்மையில் நிறைவடைந்த நிலையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், புதிய தேர்தல…