உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அழிந்து வரும் பழங்குடி மொழிகளைப் பாதுகாக்க நடவடிக்கை: ஆன்லைன் வழி சான்றிதழ் படிப்பு; ரூ.89.50 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை

சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது வெளியிட்ட அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், பழங்குடியினர் ஆய்வு மையம் மூலம் மூடுல் (Moodle) கற்றல் மேலாண்மை முறை (LMS) வாயிலாக இச்சான்றிதழ் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பழங்குடியின சமூகங்களின் மொழி மற்றும் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு 2026-27-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், பழங்குடியின மொழிகள்…