Nakkheeran
கேரள ஜோதிட இரகசியங்கள்! (பாகம்-2) -லால்குடி கோபாலகிருஷ்ணன்(26) -லால்குடி கோபால கிருஷ்ணன்
கரையில் கட்டப்பட்ட ஓடம் பாதுகாப்பானது என்றாலும், கடலில் பயணிக்காத ஓடம் சிறப்பற்றது. தாய் மரத்தின்கீழ் விழுந்த விதைகள் நன்கு முளைத்து பயன் தருவதில்லை. லக்ன திரிகோணம் வலிமையாக அமைவது, பாதுகாப்பான வாழ்க்கையைத் தருமென்றாலும், உபஜெய ஸ்தானங்கள் வலுபெற்றால் மட்டுமே வாழ்க்கை பயனுள்ளதாக அமையும். நடை, உடை, பாவனையால், பிரசன்னம் பார்க்க வந்தவர் பெரும் செல்வந்தர் என்பது புரிந்தது. தன் தந்தை உலக புகழ்பெற்ற வணிகர் என்ற அறிமுகத்துடன் பேச்சைத் தொடர்ந்தார். தன்னால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியவில்லை என்ற வருத்ததை தெரிவித்தார். பிரசன்னத்தின்மூலம் விடிவு காலம் பிறக்குமா என்ற ஏக்கத்துடன் பிரசன்னம் பார்க்க வ…