Nakkheeran
திருமணப் பொருத்தம் ஜோதிட விதிகள் 150 சென்ற வார தொடர்ச்சி...
41. ஆண் ஜாதகத்தில் சூரியன் இருக்குமிடம் பெண்ணின் ராசியாகவும் அல்லது பெண் ஜாதகத்தில் சூரியன் இருக்குமிடம் ஆணின் ராசியாகவோ இருப்பது மிக நன்று. 42. களத்திர ஸ்தானத்திற்குத் திரிகோணத்தில் சூரியனோ அல்லது சந்திரனோ இருப்பது மிகச் சிறப்பு; இது ஆண்- பெண் யாரேனும் ஒருவருக்கு அமைந்தாலும் கூடப் போதும். இருவருக்கும் இருப்பின் மிக மிகச் சிறப்பு. 43. ஆணின் குரு, பெண் ஜாதகத்திலுள்ள குருவிற்குச் "சஷ்டாஷ்டகமாக' இருக்கக்கூடாது; பொருத்தத்தின்போது இதனை அவசியம் கவனிக்க வேண்டும். 44. பெண் ஜாதகத்தில் பத்தில் சனி இருப்பின், ஆணிற்குப் பத்தில் கேது உள்ள ஜாதகத்தை இணைக்கக்கூடாது; தாம்பத்திய சுகம் இருவருக்குமே கிடைக்காது…