உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

வெறும் 'ஹேப்பி தீபாவளி' வேண்டாமே; வாட்ஸ்அப்பில் பகிர 30 மனதைத் தொடும் வாழ்த்துகள்

இந்தியாவின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள், உறவினர்களின் சந்திப்பு என எங்கும் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும்தான் நினைவுக்கு வரும். தீமையை அழித்து நன்மை வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வீடுகளை வண்ண விளக்குகளால் அலங்கரித்து, அதிகாலையிலேயே எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளைப் பகிர்ந்து குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இந்த நாளைக் கொண்டாடுவது வழக்கம். தீபாவளி பண்டிகை என்பது குடும்பத்தினருடன் மட்டுமல்லாமல் நண்பர்கள், உறவினர்கள், அன்புக்குரியவர்கள் என அனைவருடனும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொ…