Thanthi TV
காடாம்புலியூர், கடலூர்|பண்ருட்டியில் பட்டாசு வெடித்ததில் தகராறு - இளைஞரை தாக்கிய கும்பல்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, முந்திரி தொழிலாளியை வீட்டுக்குள் புகுந்து 5-க்கும் மேற்பட்டோர் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காடாம்புலியூரில் முந்திரி கம்பெனிக்கு எதிரே பட்டாசு வெடித்ததைத் தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறில், சரண் என்ற இளைஞர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்த நிலையில், முகத்தைத் துணியால் மூடியபடி ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த கும்பல் மீண்டும் அவரைத் தாக்கியுள்ளது…