Dinamani
வயநாடு நிலச்சரிவில் உயிர் பிழைத்த ஸ்ருதி புதிய வாழ்க்கைப் பயணம்: குருவாயூர் கோயிலில் திருமணம்!
வயநாடு நிலச்சரிவில் தன் குடும்பத்தை இழந்த எஸ். ஸ்ருதி புதிய வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். கேரள மாநிலத்தில், 2024-இல் ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவில் பெற்றோர் மற்றும் சகோதரி உட்படத் தனது குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரை ஸ்ருதி இழந்தார். அவரது வீடும் இந்தப் பேரிடரில் முழுமையாக அழிந்தது. அந்த இழப்பில் இருந்து மீண்டு வருவதற்குள், நடந்த ஒரு சாலை விபத்தில் ஸ்ருதிக்கு நிச்சயக்கப்பட்ட மணமகன் ஜென்சன் பலியானார். மேலும், அந்த…