Daily Thanthi
வனத்துறையினர் ஜீப்பை முட்டிக் கவிழ்த்த காட்டு யானை - வனக்காவலர் உள்பட 4 பேர் காயம்
ஊட்டி, ஊட்டி அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது, வனத்துறை ஜீப்பை காட்டு யானை முட்டி தள்ளி கவிழ்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் வனத்துறையினர் 4 பேர் காயமடைந்தனர். காட்டு யானை நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சோலூர், கோக்கால், சூட்டிங்மட்டம், காடிமந்து, தலப்பதேரி மந்து உள்ளிட்ட தோடர் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் கடந்த சில நாட்களாக 10 வயது ஆண் காட்டு யானை ஒன்று சுற்றித்திரிந்து வருகிறது. இந்த யானை அவ்வப்போது விவசாய…