Indian Express Tamil
விண்வெளியில் இருந்து பார்த்தா பூமி இப்படித்தான் தெரியுமா? தீபாவளி நாளில் சுபான்ஷு சுக்லா பகிர்ந்த தாறுமாறு வீடியோ
விண்வெளியில் இருந்து பார்க்கும்போது பூமி முழுவதும் பட்டாசுகள் வெடித்துச் சிதறுவது போலக் காட்சி அளிக்கும் அட்டகாசமான வீடியோ ஒன்றை இந்தியாவின் விண்வெளி வீரர் குரூப் கேப்டன் பகிர்ந்துள்ளார். முதல் பார்வையில் இது தீபாவளி திருநாளின் கோலாகலக் கொண்டாட்டங்கள் போலத் தெரிந்தாலும், உண்மையில் இவை மனிதர்கள் வெடித்த பட்டாசுகள் அல்ல; பூமியின் வளிமண்டலத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இயற்கை மின்னல்கள் ஆகும். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) பூமிக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது, மேகக்கூட்டங்களுக்கு இடையே மின்னல்கள் நடனமாடுவதை அவர் தனது கேமராவில் பதிவு செய்துள்ளார். விண்வெளியின் இருளில் பூமிக்கு மேலே இந்த ம…