Indian Express Tamil
வாய்ல வச்சதும் கரையும் பஞ்சு போன்ற அதிரசம்: இந்த தீபாவளிக்கு இப்படி செஞ்சு பாருங்க
தீபாவளி பண்டிகையை இனிமையாக்க செஃப் தீனாவின் கிச்சன் வழிகாட்டுதலுடன் பாரம்பரிய முறையில் பஞ்சு போன்ற மென்மையான அதிரசம் செய்வது எப்படி என்பதை எளிமையான முறையில் இந்தச் செய்தியில் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் பச்சரிசி - 1 கிலோ வெல்லம் - 800 கிராம் (தூய வெல்லம்) ஏலக்காய் தூள் - சிறிதளவு சுக்குப் பொடி - சிறிதளவு எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு தண்ணீர் - வெல்லப் பாகு காய்ச்ச தேவையான அளவு செய்முறை பச்சரிசியை நன்றாகக் கழுவி, தண்ணீரை வடிகட்டவும். அரிசி முற்றிலும் உலர்ந்துவிடாமல், லேசான ஈரப்பதம் இருக்கும்போதே நைசாக அரைத்துச் சலித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப் போட…