Samayam Tamil
Diwali Pattu Sarees: தீபாவளிக்கு அணிந்த பட்டுப்புடவையை அப்படியே அலமாரியில் வைக்காதீங்க! அதற்கு முன் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்!
தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் என வீடு முழுவதும் கொண்டாட்டத்திற்குப் பஞ்சமிருக்காது. குறிப்பாகப் பெண்கள் பலரும் இந்தப் பண்டிகையின் போது தங்களுக்குப் பிடித்தமான அழகிய பட்டுப்புடவைகளை அணிந்து மகிழ்வது வழக்கம். சிலர் பல ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய பட்டுப்புடவைகளை விசேஷ நாட்களிலும் பண்டிகை காலங்களிலும் மட்டுமே அணிவார்கள். அப்படிப்பட்ட விலைமதிப்பான பட்டுப்புடவைகளை ஒருமுறை அணிந்த பிறகு, அப்படியே அவசரமாக மடித்து அலமாரியில் பூட்டி வைப்பது சரியான பராமரிப்பு முறை அல்ல. உடலில் இருந்து வெளியேறும் வியர்வை, வாசனைத் திரவியங்கள், மேக்கப் பொருட்கள், உணவுக் கறைகள் மற்றும் காற்றி…