IBC Tamil
கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (09) கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் நாளைய தினம் (08) தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த விசேட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை குறித்த பாடசாலைகளில் வழமைபோன்று கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.