Nakkheeran
”இது இந்தியர்கள் அனைவருக்குமான பேரிழப்பு”; தவெக அரசுக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்
மத்திய-மாநில உறவுகள் தொடர்பான அரசியலமைப்பு விதிகள், சட்டங்கள் மற்றும் கொள்கைகளை மறு ஆய்வு செய்யவும், கூட்டாட்சி மற்றும் மாநில சுயாட்சியைப் பாதுகாப்பதற்காகவும், கடந்த திமுக ஆட்சியில் ’மத்திய-மாநில உறவுகள் உயர்நிலைக் குழு’ அமைக்கப்பட்டது. முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட இந்த குழுவை தற்போதைய தவெக அரசு அதிகாரபூர்வமாக கலைத்து உத்தரவிட்டது. தவெக அரசின் இந்த முடிவிற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றன. முன்னதாக, தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார். அந்த வகையில், இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர் சு…