Polimer News
கிரைண்டர் கல்லால் 7 பேர் தலையில் 'நச்' சீரியல் கில்லரான ஓட்டுனர்..! மனைவியால் தீரா ஆத்திரம்
பெங்களூரின் ஸ்ரீராம்புரா பகுதியை சேர்ந்தவர் கால் டாக்ஸி ஓட்டுனர் சேகர் - இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சேகருக்கும், சுனிதாவுக்கு திருமணமாகி 20 வருடங்கள் கடந்த நிலையிலும் இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். அவ்வப்போது சேகரிடம் சண்டையிட்டு கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு செல்வது மனைவி சுனிதாவின் வழக்கம் என்று கூறப்படுகின்றது. இந்த நிலையில் சம்பவத்தன்று கணவர் சேகரிடம் சண்டையிட்ட சுனிதா தனது பெற்றோர் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்துள்ளார். ஆனால், “நீ உனது பெற்றோர் வீட்டிற்கு செல்லக்கூடாது” என சேகர் கண்டித்துள்ளார். இருந்தாலும் கணவரின் பேச்சை மீறி சுனிதா தாய் வீட்டுக்கு ச…