Daily Thanthi
சுரண்டை அருகே வாழைத்தோட்டத்தில் பெண் எரித்துக் கொலை: 3 பேர் கைது
தென்காசி, தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வாழைத்தோட்டத்தில் பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், உயிரிழந்த பெண்ணின் கணவர், கொழுந்தன் மற்றும் மாமியார் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். துணி வியாபாரம் திருவண்ணாமலை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் முருகன் (வயது 45). இவரது மனைவி குட்டிமாரி (வயது 33). இவர்கள் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் புளியந்தோப்பு பகுதியில் தங்கி, பிளாட்பாரங்களில் துணி வியாபாரம் செய்து…