Polimer News
காமாட்சியம்மன் கோவிலில் தங்கத் தேர் உற்சவம்..
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத வெள்ளிக்கிழமையையொட்டி, தங்கத்தேர் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப் பின் பட்டாடை உடுத்தி தங்க கிரீடங்கள், சிவப்பு பவள மாலை, திருவாபரணங்கள் அணிந்து அம்மன் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். "ஓம் சக்தி,பராசக்தி" என்ற முழக்கத்துடன் பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.